Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் உயிர் தப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (09:00 IST)
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு புறப்பட்ட, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.,வின், 74ம் ஆண்டு பொது சபைகூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடு திரும்பி கொண்டிருந்தார்.
 
நியூயார்க், கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில், சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனையடுத்து இம்ரான்கான் சென்ற விமானம் மீண்டும் நியூயார்க்குக்கே திரும்பியது. இதுகுறித்து கென்னடி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது, ‘விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் உட்பட, அனைவரும் உயிர் தப்பினர்' என்று கூறினர்.
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று நாடு திரும்புவார் என் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments