குவைத் செல்லும் விமானங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன.. என்ன காரணம்?

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (14:12 IST)
குவைத் செல்லும் அனைத்து விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல், பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
விமான கண்காணிப்பு டேட்டாவின் படி, குவைத் நாட்டில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் திருப்பப்பட்டு வேறு இடங்களில் தரையிறக்கப்படுகின்றன. அதேபோல், குவைத்திலிருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாக குவைத் நாட்டில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாகவும், இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மணி நேரங்கள், குவைத் விமான நிலையத்திற்குத் எந்த விமானமும் வரவில்லை என்றும், அங்கிருந்தும் எந்த விமானமும் புறப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், சற்று முன்புதான் மீண்டும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத் நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், உலகம் முழுவதும் வான்வழி சேவைக்கு முக்கிய தளமாக இருந்து வரும் நிலையில், அந்த நாட்டிலேயே விமான சேவை பாதிக்கப்பட்டது ஏராளமான பயணிகளை பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments