கடல் மட்டம் உயர்ந்ததால் சாலமன் தீவுகள் நாட்டில் ஐந்து தீவுகள் கடலில் மூழ்கி அழிந்தன. மேலும் ஆறு தீவுகள் கடல் அரிப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுளதாக ஆரய்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பசிபிக் கடல்ல் உள்ள சாலமன் தீவுகள் நாடு 30-கும் மேற்பட்ட தீவுகளை கொண்டது. இங்கு பருவ நிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து கடல் அரிப்பில் 5 தீவுகள் தற்போது முற்றிலுமாக கடலில் மூழ்கி அழிந்துள்ளது.
இந்த தீவுகளை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தி வந்தனர். மக்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இங்கு 2 தீவுகள் கடல் அரிப்பால் ஏற்கனவே கடலில் மூழ்கியது.
பருவ நிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வதால் இந்த தீவுகள் கடலில் மூழ்கியுள்ளதாக ஆரய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.