Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீன்பிடி துறைமுகத்தில் சிறுமியை நீருக்குள் இழுத்து சென்ற கடல் சிங்கம் - வீடியோ!

மீன்பிடி துறைமுகத்தில் சிறுமியை நீருக்குள் இழுத்து சென்ற கடல் சிங்கம் - வீடியோ!
, திங்கள், 22 மே 2017 (15:53 IST)
கனடாவின் ரிச்மாண்ட் நகரில் மீன்பிடித் துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்த வேடிக்கைப் பார்க்க வந்த சிலர் கடல் சிங்கத்தை  சீண்டியதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த கடல் சிங்கம், துறைமுக விளிம்பில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்  கொண்டிருந்த சிறுமியின் ஆடையைப் பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்றது.

 
 
இதைக் கண்ட அனைவரும் செய்வதறியாது அதிர்ச்சியில் நின்றபோது, உடனடியாக நீருக்குள் குதித்த சிறுமியின் உறவினர் சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளார். இந்த சம்பவத்தை வேடிக்கைப்பார்த்த பார்வையாளர்களில் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இருந்தால் தமிழனாகிவிட முடியுமா? - ரஜினியை விளாசிய ராதாரவி