Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 நாடுகள் வழியாக 7500 மைல்கள் செல்லும் புதிய உலக சாதனை ரயில்

7 நாடுகள் வழியாக 7500 மைல்கள் செல்லும் புதிய உலக சாதனை ரயில்
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (00:30 IST)
இங்கிலாந்து மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே மிக நீண்டதூர சரக்கு ரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டது இந்த ரயில் 7 நாடுகள் வழியாக சுமார் 7500 மைல்களை 17 நாட்களில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 


இங்கிலாந்து நாட்டில் இருந்து சீனாவிற்கு விஸ்கி, குளிர்பானங்கள், வைட்டமின்கள், மருந்துகள் உட்பட பல இங்கிலாந்து பொருட்களை இதுவரை கப்பல் மற்றும் விமானங்களில் மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில் இன்று முதல் சரக்கு ரயிலில் கொண்டு செல்லும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இங்கிலந்தில் இருந்து கிளம்பி 17 நாட்களில் 7,500 மைல்கள் பயணம் செய்து சீனாவின் புகழ்பெற்ற மொத்த சந்தை நகரமான யுவூ நகருக்கு சென்றடையும், மேலும் இந்த ரயில்  பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, போலந்து, ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய 7 நாடுகள் வழியாக செல்லவிருப்பதாகவும் விமானம் மற்றும் கப்பல் வழி போக்குவரத்தை விட இந்த ரயில் வேகமாகவும் குறைந்த கட்டணத்திலும் பொருட்களை அனுப்ப உதவியாக இருக்கும் என இருநாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசையால் ஜோதிடர் வருமானம் பாதிப்பு. திருநாவுக்கரசு கிண்டல்