பிரான்ஸ் மதுபான விடுதியில் தீ விபத்து 13 பேர் பலி
பிரான்ஸ் மதுபான விடுதியில் தீ விபத்து 13 பேர் பலி
பிரான்ஸின் ரோவன் நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர்.
வடக்கு பிரான்ஸ் பகுதியான ரோவனில் கியூபா லிபர் பார் என்ற மதுபான கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் சிக்கிய பலரும் 18 முதல் 25 வயது இளைஞர்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் சிக்கினர். தற்போது தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே ரோவன் நகரில்தான் கடந்த மாதம் தீவிரவாதிகள் பாதிரியார் ஒருவரை கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.