Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதிக்கான கன்பூசியஸ் விருதை வழங்கியது சீனா

பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதிக்கான கன்பூசியஸ் விருதை வழங்கியது சீனா
, வெள்ளி, 12 டிசம்பர் 2014 (10:53 IST)
கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதிக்கான கன்பூசியஸ் விருதை சீனா வழங்கியுள்ளது.
 
சீனாவில் 'அமைதிக்கான கன்பூசியஸ் விருது' 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த இந்த ஆண்டிற்கான விருது உலக அமைதிக்கான முக்கிய பங்களிப்புக்காக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.
 
ஒன்பது நீதிபதிகள், 16 வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
 
தென் கொரிய ஜனாதிபதி பார்க் கியுன், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் உட்பட தேர்வுப் பட்டியலில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை முறியடித்து காஸ்ட்ரோ இந்த விருதைப் பெறுவதாக பீஜிங் மாநிலத்தின் க்ளோபல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
2006 ஆம் ஆண்டு, அதிபர் பதவியிலிருந்து, ஓய்வு பெற்ற பிடல் காஸ்ட்ரோவுக்குத் தற்போது 88 வயதாகிறது. கியூபா மட்டுமல்லாது, தொன்அமெரிக்க நாடுகள் அனைத்திலும் இடதுசாரி கருத்தோட்டங்கள் வளர்வதற்கு இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
 
88 வயதான பிடல் காஸ்ட்ரோவுக்கு பதிலாக ‘அமைதிக்கான கன்பூசியஸ் விருததை‘ கியூப மாணவர் ஒருவர் விழா மேடையில் பெற்றுக் கொண்டார்.
 
இதுவரை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு மெரிக்கா 500 மேற்பட்ட முறை முயற்சி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil