Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனுக்குத் தூண்டில் போட்டு லட்சம் பேரை பிடித்த இளம்பெண்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (12:34 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீன்பிடிப்பதன் மூலம் இணையத் தளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
 

 
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான டேர்ஸி அராஹில் எனும் இந்த இளம்பெண் அழகிய தோற்றம் கொண்டவர். இவர் நீச்சலுடை அணிந்த நிலையில் தான் மீன் பிடிக்கும் காட்சிகளை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
 

 
மேலும், பெண்களாலும் மீன்பிடித்து சாதிக்க முடியும் என நிரூபிப்பதற்கு தான் விரும்பியதாக டேர்ஸி அராஹில் கூறுயுள்ளார். “மீன்பிடிப்பது நடுத்தர வயதுடைய ஆண்களுக்கான வேலை என பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். எனவே பெண்களான எங்களாலும் மீன்பிடிக்க முடியும் என நிரூபிப்பது மிகவும் திரில்லாக உள்ளது” என்கிறார் டேர்சி.
 

 
23 அடி நீளமான தனது படகின் மூலம் கடலில் பயணம் செய்து அவர் மீன்களை பிடிக்கிறார். தூண்டில் மூலம் மட்டுமல்லாது சுழியோடிச் சென்றும் முக்கிய மீன்கள் மற்றும் சிங்கி இறால்களை  டேர்ஸி அராஹில் பிடித்துள்ளார்.

“நீச்சலுடை அணிந்து கொண்டு, 6 அடி நீளமான மீனை நான் தூக்கி வைத்திருப்பதை பார்க்கும் பலர் அதிர்ச்சியடைகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
 

 
பெரிய மீன்களுடன் போராடுவதைவிட வேறு எதையும் நான் அதிகம் விரும்பவில்லை எனவும் இதுவரை தான் பிடித்த மீன்களிலேயே மிகப் பெரியது 8 அடி நீளமான ஒரு சுறாவாகும் என டேர்சி தெரிவித்துள்ளார்.
 

 
“அப்போது மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இறுதியில் நானே வென்றேன். ஆனால், அதை நான் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டேன். பாதுகாக்கப்படும் இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் எல்லாவற்றையும் நான் இப்படியே செய்கிறேன்” என அவர் கூறுகிறார்.
 

 
ஆனால், டேர்ஸி அராஹில் மீன்பிடிப்பதில் மாத்திரம் திறமையானவர் அல்லர். ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றில் பணியாற்றம் அவர்,  புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நீதித்துறையில் உயர்கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இணையத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments