Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் அதிவேக சார்ஜர் பஸ்; சீனா இயக்குகிறது

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (17:56 IST)
கிழக்குச் சீனாவில் அதிவேகமாக சார்ஜ் செய்து செயல்படும் மின்சார பேருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
 

 
பேட்டரி மூலம் சார்ஜ் செய்து இயக்கப்படும் அதிவேக பேருந்து நேற்று செவ்வாய் கிழமை முதல், கிழக்குச் சீனாவின் நிங்க்போ மாகாணத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தனது பேட்டரி முழுவதுமாக நிரப்புவதற்கு வெறும் 10 விநாடிகளே ஆகிறதாம். 
 
இது குறித்து உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”நிங்க்போ, ஷீஜியாங் மாகாணங்களின் 11 கி.மீ அளவுள்ள வழித்தடத்தில் 24 நிறுத்தங்களில் இந்த பேருந்து செயல்படும். மேலும், அடுத்த மூன்று ஆண்டுக்குள் 1,200 பேருந்துகள் பொது போக்குவரத்தின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், மற்ற மின்சார பேருந்துகளை விட 30 முதல் 50 சதவீதம் குறைவாகவே, இந்த பேருந்து இயக்கபடுவதற்கு தேவைப்படுகிறது. 10 வருடங்கள் உழைக்கும் இந்த பேருந்தை ஒரு மில்லியன் முறை இது போன்று சார்ஜ் செய்து இயக்கிக்கொள்ள முடியும்.
 

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

Show comments