Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு லட்ச ரூபாயை சில்லறையாக கொடுத்து கார் வாங்கிய விவசாயி

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (12:14 IST)
சீனாவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை மொத்த பணத்தையும் சில்லறைகளாக கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார்.
 
சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48) என்ற விவசாயி, புதிய கார் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்றுள்ளார்.
 

 
அவர், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய மாடல் கார் ஒன்றை தெரிவு செய்துள்ளார். பின்னர் அந்த காருக்கான பணத்தை 4 மூட்டைகளில் எடுத்து வந்து அவர் கார் நிறுவன ஊழியர்களிடம் கொடுத்துள்ளார்.
 
மூட்டையை திறந்துபார்த்த அவர்கள் முழுவதும் சீனாவின் யுவான் நாணயங்களாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மதியம் 12 மணியளவில் 6 ஊழியர்கள் நாணயங்களை எண்ணத் தொடங்கி, மறுநாள் அதிகாலை வரை எண்ணி முடித்துள்ளனர்.
 

 
4 மூட்டைகளிலும் சுமார் 51,800 சீன யுவான் நாணயங்கள் (இந்திய ரூபாயில் ரூ.5.95 லட்சம்) இருந்துள்ளது. மேலும், மீதித் தொகையை, 3 நாட்களுக்குள் கொடுத்து காரை எடுத்து செல்கிறேன் என்று வாங் ஜுபே சொல்லி விட்டு வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments