Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (20:51 IST)
பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
 

 
'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன் பக்கத்து கேமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும்.
 
பின்னர் இந்த செயலி ஃபோனையே செயலற்றுப்போகச் செய்துவிடும். சொல்கிற கணக்கில் ஐநூறு டாலர் பணம் செலுத்தினால்தான் ஃபோன் மறுபடியும் இயக்க முடியும் என்று அச்செயலி எச்சரிக்கும். பணம் செலுத்தாமல் மறுபடியும் ஃபோனைப் பயன்படுத்துவது மிகவும் சிரமம்.
 
இப்படியாக மிரட்டிப் பணம் பறிக்கும் செயலிகளை உருவாக்குவது ஒரு லாபகரமான இணையக் குற்றமாக பரவி வருகிறது என இணையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
தனிப்பட்ட தரவுகளை அழித்துவிடுவோம், வெளியில் பரவவிட்டு விடுவோம் அல்லது ஃபோனை முடங்கச் செய்துவிடுவோம் என்று மிரட்டுகிற இப்படியான செயலிகளை 'ரேன்சம்வேர்' என்று அழைக்கின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!