Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் ஆளுனர் அலுவலகத்திற்குள் வெடிவிபத்து- 3 பேர் பலி

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (17:06 IST)
ஆப்கானிஸ்தான்  நாட்டில் ஆளுனர் அலுவலகத்திற்குள் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆளுனர் உட்பட 3 பேர் பலியாகினர்.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற நிலையில், அங்கு, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதையடுத்து, பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு, பொதுஇடங்களில் ஹிஜாப் அணிந்து செல்லல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அடிக்கடி, அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்து வருவது  மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் மாகாணத்தின் தலைநகர் மஸார் –இ ஷெரீப்பில் உள்ள ஆளுனர் அலுவலகத்திற்குள் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், தாலிபான் களால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுனர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.  கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் பொறுப்பேற்றது முதல் அங்கு தீவிரவாத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments