Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்..! அமெரிக்காவுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்..!!

Senthil Velan
சனி, 27 ஜனவரி 2024 (17:57 IST)
அமெரிக்காவில் கொலை குற்றவாளிக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடியே எலிசபெத்தை அடித்து கொலை செய்தனர். 
 
மனைவி கொலை செய்யப்பட்ட சில மாதங்களிலெயே சார்லச் தற்கொலை செய்துக்கொண்டார். எனவே எலிசபெத்தின் கொலைக்கு காரணமான கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
 
இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ஊசி மூலம் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கென்னத்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிக்க முடியாததால் அது நிறைவேற்றப்படவில்லை.
 
இந்நிலையில் நேற்று அவருக்கு கொடூரமான முறையில் மரண தண்டை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கென்னத்துக்கு தான். இதற்காக அலபாமா சிறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெறும் நைட்ரஜன் வாயுவை மட்டும் அவர் சுவாசிக்க வைக்கப்பட்டார்.

ALSO READ: காவல்துறை அதிகாரிகள் 11 பேர் அதிரடியாக இடமாற்றம்..! திருப்பூர் எஸ்.பி பணியிட மாற்றம்..!!

அதன்படி அவர் உயிரிழக்க சரியாக 22 நிமிடங்கள் ஆனதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு கொடூரமான முறை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments