Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானால் நெருக்கடியின் விளிம்புக்கு செல்லும் ஐரோப்பிய சுகாதாரக் கட்டமைப்பு

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (14:41 IST)
ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் என உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரி எச்சரிக்கை.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
இதனைத்தொடர்ந்து ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் என உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹான்ஸ் குளூக் எச்சரித்துள்ளார்.
 
ஏற்கனவே ஐரோப்பாவின் பல நாடுகளில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு தற்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments