Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள்! – ரஷ்யாவை மீறி ஐரோப்பிய நாடுகள் முடிவு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:34 IST)
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவ ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

ரஷ்யாவை விட வலிமை குறைந்த நாடான உக்ரைன் இந்த போரில் பொதுமக்களையும் ஈடுபடுத்தி போராடி வருகிறது. உக்ரைனுக்கு தேவையான நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. உக்ரைன் போரில் பிற நாடுகள் நுழைய கூடாது என ரஷ்யா எச்சரித்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments