Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க கொரோனா மருந்தை ரஷ்யா திருட பாக்குறாங்க! – இங்கிலாந்து பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (09:10 IST)
இங்கிலாந்தின் கொரோனா மருந்து குறித்த ஆய்வு தகவல்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் பல தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இங்கிலாந்தும் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. மேலும் இங்கிலாந்தின் மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதால் விரைவில் அவை புழக்கத்திற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயல்வதாய் இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் குழப்பத்தை விளைவிக்க இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான தகவல்களை திருடி வெளியிட ரஷ்யா முயற்சித்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஹேக்கர்களை கொண்டு மருத்துவ தகவல்களை திருடும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து சுமத்துவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments