Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபலங்கள் பெயரில் உள்ள கணக்குகள் நிரந்தர முடக்கம்? – எலான் மஸ்க் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (09:23 IST)
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பிரபலங்கள் பெயரில் போலி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ட்விட்டர் முக்கிய அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய பின்னர் ட்விட்டர் ஆலோசனை குழுவையும் கலைத்தார்.

அடுத்ததாக ப்ளூ டிக் சலுகையை பெற கட்டணம் நிர்ணயித்ததுடன், ட்விட்டர் வார்த்தை வரம்புகளையும் அதிகரித்துள்ளார். தற்போது பிரபலங்களின் பெயரில் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ: 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?

பிரபலங்களின் பெயரில் அல்லது மற்றொருவர் பெயரில் தொடங்கப்படும் கணக்குகளில் பரோடி (Parodgy) என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும், அப்படி குறிப்பிடாத கணக்குகள் முன் அறிவிப்பின்றி நிரந்தரமாக முடக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பல பிரபலங்களின் பெயரில் இதுபோன்ற பரோடி கணக்குகள் செயல்படும் நிலையில் அது பரோடி என தெரியாமல் பலரும் அந்த பிரபலமே சொன்னதாக நம்புவதால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க எலான் மஸ்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments