Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல்.... கி.வீரமணி

ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல்.... கி.வீரமணி
, வியாழன், 14 ஜனவரி 2016 (03:41 IST)
ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் சிறீசேனா தலைமையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவு காரணமாக அமைந்த அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. கொடுங்கோலன், தமிழினப் படுகொலையாளியான மகிந்த ராஜபக்சேவின் ஆட்சி ஒழிந்து ஓராண்டு ஆகிறது என்றே நாகரிக உலகமும், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கருதுகின்றனர்.
 
புதிய அதிபர் சிறீசேனா தலைமையில் உள்ள அரசு தேர்தலின் போது அது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் தலையாய கடமை ஆகும். அந்த வகையில், அதிபர் ஆட்சி முறையை மாற்றி கேபினட் தகுதியுள்ள ஜனநாயக முறை திருத்தத்தை நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது.
 
மேலும், ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil