Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கிளம்பியது எபோலா வைரஸ்! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (13:43 IST)
கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலால் 2,300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவின் வடமேற்கு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அருகே உள்ள தான்சானியா நாட்டில் எபோலாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் இன்னும் மீளாத சூழலில் மீண்டும் எபோலா பரவல் தீவிரமடைவது ஆப்பிரிக்க நாடுகளை மட்டுமன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளஸ் 1 மாணவனை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

இது எங்க இடம் தான்.. ராணுவத்திற்கு சொந்தமான விமான ஓடுதளத்தை விற்ற தாய்-மகன்..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்து கொண்டால் 500% வரி.. இந்தியாவை மறைமுகமாக மிரட்டிய டிரம்ப்!

சாட்ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்! உருவாக்கிய ஓனரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்.. பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments