Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா போர் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் யாருடன் பேசினார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (11:53 IST)
சிரியா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை செய்தி தெரிவித்துள்ளது.
 
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்தனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் உளவு அமைப்பும் செயல்பட்டு வந்தது. இந்த போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுடா நகரை மீட்பதற்காக சிரிய அரசு, ராணுவ தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது.
 
இந்த தாக்குதல் காரணமாக 900 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனால் ஐநா அமைப்பு சிரிய அரசு படைகளுக்கும், கிளிர்ச்சியாளர்களுக்கும் நடுவே 5 மணி நேரம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்தது. ஆனால், சிரிய அரசு போர் ஒப்பந்தத்தை மீறி கடந்த ஞாயிற்றிகிழமையிலிருந்து தொடர்ந்து வான்வழி தாக்குதலில் நடத்தி கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலினால் 40க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியும் தொலைபேசியில் சிரியாவில் நடக்கும் தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் அரசு ஆதரவு தெரிவிப்பதை நினைத்து கவலை தெரிவித்தனர். பின்பு சிரியாவில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று தொலைபேசியில் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments