Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழப்பு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழப்பு..
Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (13:41 IST)
டொனால்ட் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழப்பு..
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் சகோதரர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டி மருத்துவமனையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சகோதரர் ராபர்ட் டிரம்ப் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது
 
முன்னதாக ராபர்ட் டிரம்ப் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்தியை அடுத்து நியூயார்க் சிட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது சகோதரரை கடைசியாக ஒருமுறை டொனால்ட் டிரம்ப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தனது சகோதரர் மரணமடைந்தது குறித்து டிரம்ப் குறிப்பிடுகையில் ’அவர் எனது சகோதரர் மட்டுமல்ல. என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் மறுபடியும் எப்போது சந்திப்போம்? அவருடைய நினைவுகள் என் மனதில் வாழும். நான் உன்னை நேசிக்கிறேன். அமைதி கொள்’ என்று தெரிவித்துள்ளார் 
 
ராபர்ட் டிரம்ப் இறந்ததற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் அவருக்கு மூளையில் ரத்த கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments