Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கல்யாணமே பண்ணிக்காதீங்க’ - சொல்வது யார் தெரியுமா?

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (12:17 IST)
ஹாலிவுட் பிரபலங்களான பிரிட்னி ஸ்பியர்ஸ், கிம் கர்டாஷியன், ஜானி டெப், அஷ்டான் உள்ளிட்ட பலருக்கும் விவாகரத்து வாங்கிக் கொடுத்தவர் வழக்கறிஞர் லாரா வாசர்.

 
 
சமீபத்தில் அவர் விவாகரத்து வாங்கி தந்த ஜோடி, ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட். லாராவின் பெற்றோர் இருவருமே பிரபல வழக்கறிஞர்கள். லாராவின் அப்பா டென்னிஸ் வாசரும் விவாகரத்துக்குப் பெயர் போன வழக்கறிஞர். டாம் க்ரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றோருக்கு விவாகரத்து வாங்கி தந்தவர் லாராவின் தந்தை.  
 
சோகம் என்னவெனில் லாராவின் திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது. அவர் தற்போது, இரண்டு குழந்தைகளுடன் தனியே  வசித்து வருகிறார்.
 
இவர் ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 56 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கிறார். விவாகரத்து குறித்து லாரா கூறியதாவது, “என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல என் கிளையண்ட்டுகளோட கேரக்டரையே புரிஞ்சுக்க முடியறதில்லை. இவங்க எத்தனை நாளைக்கு சேர்ந்து வாழப் போறாங்கனு நினைக்க வைக்கிற எத்தனையோ ஜோடிகள் வருஷக் கணக்குல சேர்ந்திருக்கிறதையும் பார்த்திருக்கேன்.

மேட் ஃபார் ஈச் அதர்னு பாராட்டப்பட்ட ஜோடிகள் ஒரு வருஷத்துக்குள்ளயே பிரிஞ்சு போறதையும் பார்த்திருக்கேன். டைவர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுங்கிறதால, திருமண உறவைத் தக்க வச்சுக்க என்னதான் வழினு என்கிட்ட நிறைய பேர் கேட்கறாங்க. எனக்கு பிரிவைப் பத்தி மட்டும்தான் தெரியும். உறவைத் தக்க வச்சுக்கற வழி தெரிஞ்சிருந்தா என் விஷயத்துலயே அது நடந்திருக்குமே. என்னோட பெஸ்ட் அட்வைஸ் கல்யாணமே பண்ணிக்காதீங்க.'' என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

அடுத்த கட்டுரையில்