Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் 'ஜெயிலர் 'படத்தைப் பார்த்த மங்கோலிய முன்னாள் அதிபர்...என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (13:42 IST)
ரஜினியின் ஜெயிலர் படத்தைப் பார்த்த மங்கோலிய அதிபர் இப்படத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  ஆகஸ்ட் 10 ஆம்  தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இப்பட,ம் முதல் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த மங்கோலிய முன்னாள் அதிபர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘’இந்திய சினிமாக்கள் மங்கோலியர்களுக்கு பிடிக்கும். இப்படம் பார்த்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஏனென்றால் இப்படத்தில் மிகப்பெரிய ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரஜினி படம் வெளியாகியிருக்குன்னு தெரிஞ்சதும் இப்படத்தப் பார்த்தேன்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments