உலகை ஆளும் டெல்டா கொரோனா வைரஸ்... WHO எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (09:42 IST)
உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் மத்தியில் உள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும் இரண்டாவது அலை வைரஸை விட மோசமானது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், WHO டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், டெல்டா வகை வைரஸ் தற்போது 96 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மிக வேகமாக பல நாடுகளுக்கு பரவி வருவதால் வரும் மாதங்களில் அனைத்து வகை வைரஸ்களில் டெல்டா வகையின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. 
 
மேலும், தற்போதைய நிலையில் ஆல்பா வகை கொரோனா வைரஸ் 172 நாடுகளில் பரவியுள்ளது. பீட்டா வகை வைரஸ் 120 நாடுகளிலும் காமா வகை வைரஸ் 72 நாடுகளிலும் பரவியுள்ளது.  டெல்டா பிளஸ் வகை வைரஸ் மேலும் 12 நாடுகளுக்கு பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை

கிரிக்கெட் பயிற்சியாளர் சுட்டு கொலை.. ஹரியானாவில் பெரும் பதட்டம்..!

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீசார்..!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேநபர் மன நல பாதிப்பில் உள்ளாரா? பெரும் நிதிச்சிக்கல் வேறு..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

அடுத்த கட்டுரையில்
Show comments