Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கல்லால் அடித்து கொல்ல உத்தரவு

Webdunia
திங்கள், 29 மே 2017 (19:48 IST)
பாகிஸ்தான் நாட்டில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்னை, முறைகேடாக உறவில் ஈடுப்பட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராம பஞ்சயத்து உத்தரவிட்டுள்ளது.


 

 
பாகிஸ்தான் நாட்டின் ராஜன்புர் கிராமத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்கள் கடுமையாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 19 வயது இளம்பெண் தனது உறவினருடன் முறைகேடாக உறவில் ஈடுப்பட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை கல்லால் அடித்து கொல்லுதல். 
 
ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, உறவுக்கார இளைஞன் துப்பாக்கி காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளான்.
 
இந்த உண்மையை அந்த இளம்பெண் பஞ்சாயத்தில் எடுத்துக் கூறியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடிய பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்