Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் அதி பயங்கரமான நீச்சல் குளம்; வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:45 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 40வது மாடியில் உலகிலேயே அதி பயங்கரமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.


 

 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் 40வது மாடியின் மேல்தளத்தில் நீச்சல் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதி பயங்கரமான நீச்சல் குளம் இதுதான் என கூறப்படுகிறது. 
 
இந்த நீச்சல் குளத்தில் நீந்தும்போது நகரின் மேல் நீச்சல் அடிப்பது போலும், வானில் பறப்பது போன்ற உணர்வும் கிடைக்கும். இந்த நீச்சல் குளத்தின் சிறப்பு என்னவென்றால். பறவைகள் கண்களுக்கு நகரம் எப்படி தெரியுமோ? அதேபோன்று நீச்சல் குளத்தில் நீந்தும் போது நமக்கும் அந்த உணர்வு கிடைக்கும். இதனால் வானில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
 
இந்த நீச்சல் குளத்தில் மன தைரியம் உடையவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும். 8அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

நன்றி: WCK Production
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி.. தேதி அறிவிப்பு..!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ..!

மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments