Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நடன பெண்’ சிலை எங்களுக்குதான் சொந்தம்: பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (15:09 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை அதிகரித்து வரும் நிலையில் மொகஞ்சதாரோ பகுதியில் கண்டுப்படிக்கப்பட்ட நடன பெண் வெண்கலச் சிலையை இந்தியாவில் இருந்து மீட்க வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
இந்து சமவெளி நாகரிக காலம் தொடர்பான வரலாற்று ஆதாரமாக பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோ பகுதியில் 1926ஆம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் பழமையான ஒரு வெண்கலச் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டது. அது நடன பெண் சிலை ஆகும்.
 
தற்போது அந்த சிலை டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் பாதுகாபில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கலை பொக்கிஷமான இந்த சிலையை இந்தியாவிடம் இருந்து மீட்டு தங்கள் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
ஐரோப்பா கண்டத்தில் வைக்கப்பட்டுள்ள லியானார்டோ டாவின்சியின் பிரபல ‘மோனாலிசா’ ஓவியத்துக்கு இணையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிலையை பாகிஸ்தானின் கலாச்சார அடையாளம் எனவும், இதை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments