Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”சீனாவைக் கண்டு வியக்கிறேன்” - திபெத் தலைவர் தலாய்லாமா புகழாரம்

”சீனாவைக் கண்டு வியக்கிறேன்” - திபெத் தலைவர் தலாய்லாமா புகழாரம்
, புதன், 28 ஜனவரி 2015 (15:08 IST)
மிகச்சிறந்த தேசம் சீனா; அதனைக் கண்டு வியக்கிறேன் என்று திபெத்திய தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
 

 
காசியபாத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தலாய்லாமா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,” நீண்ட வரலாறு, கலாச்சாரங்கள் மற்றும் கடினமாக உழைக்கும் மக்களை கொண்ட மிகச்சிறந்த தேசம் சீனா. அதைக்கண்டு நான் வியக்கிறேன்.
 
இந்தியாவும் சீனாவும் மிகவும் பிரபலமான நாடுகள். பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் அண்டை நாடுகள் இரண்டும் நெருங்கிய நட்புறவை வைத்துக்கொள்ள வேண்டும். திபெத்துக்கு மட்டுமல்லாமல் ஆசியாவுக்கும் இது மிகவும் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil