அமேசான் காட்டுத் தீயில் இறந்த குட்டிக்காக அழும் குரங்கு : உண்மை நிலவரம் என்ன ?

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (18:35 IST)
அமேசான் காட்டில்  வாழும் அரியவகை உயிரிங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். 
இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.
 
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
 
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
 
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.
 
இந்த தீயில் சிக்கி இறந்த தன் குட்டி குரங்கை, தாய் குரங்கு தனது மார்பில் போட்டு கட்டியணைத்து கதறி அழுகின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றது.இந்தக் காட்சியை காண்போர் நெஞ்சில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
 
இந்த புகைப்படத்தை ஷேர் செய்து  அமேசானுக்கான பிராத்தனை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக்கும் டுவிட்டரில் வைரலாகிவருகின்றது. 
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பற்றி வெளியான தகவல் ; கடந்த 2017 ஆம் ஆண்டு அவினாஷ் லோதியாவில் இப்புகைப்படம் எடுக்கபட்டுள்ளது. ஜபால்புரி இந்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவினாஷ் கூறியுள்ளதாவது : என் இதயத்துக்கு மிக நெருக்கமான படம் இது. இந்த புகைபடத்தில் உள்ள குட்டிக் குரங்கு மயங்கம் அடைந்த நிலையில் இதைப் பார்த்த தாய் குரங்கு, இறந்ததாக  நினைத்து கதறி அழுததாகக் கூறியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments