Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவத்திலும் தடம் பதித்த கொலைக்கார கொரோனா!!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (10:34 IST)
அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 8 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த புது வைரஸ் 70% அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், கடைசியாக இதுவரை கொரோனா எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் ராணுவ முகாம் வைத்துள்ள பிற நாடுகள் இதுவரை கொரோனா வைரஸ் குறித்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments