Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்க்ரீமில் கொரோனா வைரஸ்: 1682 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (18:21 IST)
கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு எந்த ரூபத்தில் பரவும் என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத நிலையில் திடீரென ஐஸ் கிரீமில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சீனாவிலுள்ள தியான்ஜின் என்ற பகுதியில் இயங்கிவரும் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்று தயாரித்து 1812 ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் இருந்ததாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய 1682 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த நிறுவனத்தின் ஐஸ்கிரீமை யார் யார் எல்லாம் வாங்கி சாப்பிட்டார்கள் என்பதை அடையாளம் காணும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது
 
ஐஸ் கிரீமில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்ற தகவல் காரணமாக சீனாவில் ஒரே நாளில் ஐஸ்க்ரீம் விற்பனை படுபாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments