அச்சுறுத்தும் கொரோனா; ஒரே நாளில் 200 பேர் பலி..

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (09:36 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் மட்டும் 242 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.

கொரோனா வைரஸ், சீனாவை தொடர்ந்து கிட்டதட்ட 25 க்கும் அதிகாமான நாடுகளில் பரவியுள்ளது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் முதல்முதலாக வைரஸ் பரவிய ஹூபெய் மாகாணத்தில் தற்போதைய நிலவரப்படி ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதன் படி கொரோனா வைரஸால் இது வரை பலியானோரின் எண்ணிக்கை 1357 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments