ஆண் கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண் சிறை அலுவலர்

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (14:16 IST)
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா நகரில் உள்ள பெண் சிறை அலுவலர் ஒருவர் சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் ஆண் கைதி ஒருவரை பாலியல் அடிமையாக்கி வைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள சிறை ஒன்றில் வில்லியம் கார்டோபா என்ற 57 வயது நபர் ஒருவர் கொலை மற்றும் திருட்டு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் இதே சிறையில் காவல் அதிகாரியாக பணிபுரியும் சில்வியா புல்டோ என்பவர் தனக்கு உதவியாளராக வில்லியமை நியமித்துள்ளார்.

இந்த நிலையில் தனது ஆசைக்கு அவ்வப்போது இணங்கினால் விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்வதாக வில்லியமிடம் கூறி அவ்வப்போது அவரை பாலியல் உறவுக்கு சில்வியா பயன்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை பாலியல் அடிமைபோல் பெண் சிறை அதிகாரி சில்வியா பயன்படுத்துவதை புரிந்து கொண்ட வில்லியம், இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சில்வியா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு, அவருக்கு நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில் ரூ.4 கோடி வழங்கவும் உத்தரவிட்டது.

சிறை அதிகாரி ஒருவரே சிறைக்கைதியை பாலியல் அடிமையாக்கிய விவகாரம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்