Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

200 வருடங்கள் வாழ்ந்த சீன பெண்மணி!!

200 வருடங்கள் வாழ்ந்த சீன பெண்மணி!!
, வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:21 IST)
சீனா நாட்டைச் சேர்ந்தவர் லி சிங்-யோன். உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக இவர் கருதப்படுகிறார். ஆனால், இவரின் பிறப்பை பற்றி சரியான தகவல்கள் எதுவும் இல்லை.


 
 
லி சிங்-யோன் அவர்கள் 1736-ம் ஆண்டு பிறந்தார் எனவும், ஆனால் வரலாற்றின்படி பார்க்கும் போது இவர் 1677-ம் ஆண்டிலேயே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
 
லி சிங்-யோன் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் இவரது வயது 197 அல்லது 256 ஆக இருக்ககூடும். சீன அரசின் வரலாற்று கோப்புகளில், லீயின் 150வது மற்றும் 200வது பிறந்த நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்த நிகழ்வுகள் உள்ளது. 
 
இவர் தனது பத்தாவது வயதில் இருந்தே கன்சூ, ஷான்ஷி, திபெத், சியாம் மற்றும் மஞ்சூரியா போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்து, நிறைய மூலிகைகளை சேகரித்துள்ளார். 
 
மூலிகைகள் மற்றும் அரிசி ஒயின் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர் நல்ல கண் பார்வை, விறுவிறுப்பான உடல் திறன், ஏழடி உயரம், நீளமான நகங்கள், சிவந்த நிறம் ஆகிய தோற்றத்தை கொண்டிருந்ததாக கூறுகின்றார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா முன்னரே இறந்து விட்டார்; நாடகமாடிய கும்பல்: தமிழச்சி மீண்டும் சர்ச்சை பதிவு!