Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி விழப்போகும் சீன விண்வெளி நிலையம்??

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (11:29 IST)
சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம். இது தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் பூமியை நோக்கி வருவதாகவும், பூமியில் வந்து விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

 
ஆனால், இது பூமியில் எங்கு வந்து விழும் என்பது தெரியவில்லை. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இந்த விண்வெளி நிலையம், சீனாவின் முதல் விண்வெளி நிலையம் ஆகும். டியான்காங் 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020ல் மிகப் பெரிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க சீனா திட்டமிட்டிருந்தது. 
 
டியான்காங் 1 தற்போது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால், பூமியில் வந்து விழும்போது துகள்களாக விழும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
 
இருப்பினும் அடுத்த ஆண்டுதான் இந்த விண்வெளி நிலையம் பூமியில் வந்து விழுமாம். இதுதொடர்பான செய்திகள் முன்பு வதந்தியாக வலம் வந்தன. தற்போது சீனாவே அதை உறுதிப்படுத்தி விட்டது.
 
இந்த விண்வெளி நிலையமானது அப்படியே முழுமையாக பூமியில் வந்து விழ வாய்ப்பில்லை. மாறாக அது வளிமண்டலத்திற்குள் நுழைந்ததுமே எரிந்து விடும். உதிரி பாகங்களாக அது பூமியில் வந்து விழும். இருப்பினும் அது எங்கு விழும் என்பதை அனுமானிக்க முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
பூமியிலிருந்து விண்வெளிக்கு ஏவுவதை விட பூமிக்கு விண்கலத்தைத் திரும்பக் கொண்டு வருவது மிகவும் கடினமானதாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

விஜய்யையும் என்னையும் ஒப்பிட வேண்டாம், நான் அவரை விட அரசியலில் சீனியர்: விஜய பிரபாகரன்

பாகிஸ்தானுக்கு ஒரே நல்ல செய்தி விராத் கோலி ஓய்வு பெற்றது தான்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

மோடி பிரதமராக இருந்தால் எல்லாமே சாத்தியம்.. விடுதலையான பிஎஸ்எப் வீரர் மனைவி நெகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments