Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாச்சல பிரதேசத்தில் தலாய்லாமா. இந்தியாவுக்கு சீனா கண்டனம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (23:12 IST)
இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே அருணாச்சலபிரதேச மாநிலம் குறித்து சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருகும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் திபெத்திய மக்களின் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புத்தமத துறவியான தலாய் லாமா அருணாச்சல பிரதேசம் வர இந்தியா அனுமதி கொடுத்துள்ளது.



அருணாசலப் பிரதேசம் மாநில அரசின் அழைப்பை ஏற்று விரைவில் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய்லாமா செல்லவுள்ளார். இதற்கான அனுமதியை கொடுத்த இந்திய அரசுக்கு சீன அரசு தனது கடுமையான எதிர்ப்பையும், கண்டத்தையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் கெங் ஷுவாங் பீஜிங் நகரில் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சீனா-இந்தியா இடையிலான கிழக்குப் பகுதி எல்லை பிரச்சனை என்பது நிரந்தரமான, தெளிவான பிரச்சனையாக நீடித்து வருகிறது. இங்குள்ள தலாய் கூட்டத்தார் சீனாவுக்கு எதிரான பிரிவினை போக்குசார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது, நல்லது அல்ல.

இப்படி ஒரு பின்னணியில், தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக வெளிவரும் செய்திகள் இந்தியா மற்றும் சீனாவின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதிக்கு மோசமான பாதிப்பதை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவையும் பாதிப்பு அடையச் செய்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments