Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளியல் அறையில் கேமரா..: தேடித் தேடி வேட்டையாடப்படும் பெண்கள்

சீனா
Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (17:03 IST)
சீனாவில் குறிப்பிட்ட இஸ்லாமிய இனத்தை சேர்ந்த பெண்களை தேடி அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு பெண்ணால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்தாலோ, அடையாள அட்டையை பாதுகாக்க தவறினாலோ கடுமையாக தண்டிக்கப்படுவார்களாம். 
 
ஒரே தளத்தில் சுமார் 230 பெண்களை அடைத்து வைத்து, பல நாட்கல் தூங்கவிடாமல் சித்திரவதை செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி பல மணி நேரம் அறையில் அமரவைப்பார்களாம். 
 
சில சமயங்களில் இரும்பு நாற்காலியில் அமரவைத்து மின்சாரம் பாய்ச்சுவது, கழிவறை மட்டுமின்றி குளியல் அறையிலும் கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருக்குமாம். இதனால் பல நாட்கள் குளிக்காமலும், கழிவறைக்கு செல்லாமலும் இருந்து உள்ளதாகவும் அந்த தப்பித்து வந்த பெண் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இதுபோன்று சுமார் 2 மில்லியனுக்கு மேற்பட்ட பெண்களை சீனா சித்திரவதைக்கு உட்படுத்துவதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments