Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் மிகப்பெரிய டெர்மினல் உருவாக்க பெய்ஜிங் திட்டம்

உலகின் மிகப்பெரிய டெர்மினல் உருவாக்க பெய்ஜிங் திட்டம்
, வியாழன், 30 ஏப்ரல் 2015 (20:07 IST)
ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் உலகின் மிகப்பெரிய டெர்மினல் உருவாக்க பெய்ஜிங் திட்டம் தீட்டியுள்ளது.
 

 
உலகப் பயணம் செய்ய ஆர்வமுள்ள சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு சில ஆண்டுகளாக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது.
 
பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம், உலகின் மிகப்பெரிய டெர்மினலை தொடங்க உள்ளது. 2018-இல் திறக்கப்படும் இந்த பிரம்மாண்டமான டெர்மினல் 1 விமான நிலையம், 700,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகள் கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது.
 
வாடிக்கையாளர் நடைபயிற்சி தூரத்தை குறைக்கும் நோக்கத்திற்னான ஒரு ஆறு அடுக்கு கான்செப்ட் உருவாக்கவும் மற்றும் இணைப்பை அதிகரிக்கவும் பிரிட்டிஷ்-ஈராக் ஆர்கிடெக்ட், Zaha Hadid உடன் விமான நிலைய டெவலப்பர்கள் ADPI இணைந்து செயல்படுகிறது.
 
பெய்ஜிங் விமான நிலையம் மிகப்பெரியதாக பரந்த அளவில் காண வேண்டும் என்ற நோக்கத்துடன், அதன் வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகின்றனர். அதாவது, கூரையில் ஓடும் நிலைப்பாடு (flowing lines) பிரதிபலிக்கும், மற்றும் உள்ளே குறைவான தூண்களை கொண்டிருக்கும். அனைத்து பயணிகளின் பாதை வழிகள், உலகம் முழுவதிலும் இருந்து பயணிக்கும் பயணிகள் சந்திக்கும் இடமாக மையத்தில் பல அடுக்கு முற்றம் கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil