Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (18:47 IST)
சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையத்தைக் கட்டும் திட்டத்தினை சீனா அறிவித்துள்ளது.
 

 
சீனா வருகின்ற 2022ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. அப்போட்டிகளை சிறப்பாக நடத்துவது குறித்து, முன் தயாரிப்பிற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
 
இந்த ரயில் நிலையம், தலைநகர் பீஜிங்க்கு தென் மேற்காக 80 கிலோ மீட்டர் தொலைவில் அதிக மக்கள் வருகை புரியும் பகுதியான படாலிங்க் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த பகுதி, சீன புத்தாண்டு விடுமுறை நாட்களில் தினசரி 30 ஆயிரம் பேர்கள் வருகை புரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது பூமிக்கடியில் 36ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், கிட்டத்தட்ட ஐந்து கால்பந்து மைதானத்திற்கு சமமான பரப்பளவில் அமையவுள்ளது.
 
இதுதான், உலகின் அதிவேக மற்றும் ஆழமான ரயில் நிலையமாக உருவாக்கப்படும் என்று சீன ரயில்நிலைய கட்டுமான பணி இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments