Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் தொடங்கியது 5ஜி: இந்தியாவில் எப்போது?

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (09:10 IST)
மின்னல் வேகத்தில் இண்டர்நெட் பயன்பாட்டுக்கு உதவும் 5ஜி தொழில்நுட்பம் உலகின் ஒருசில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவிலும் இந்த சேவை தொடங்கிவிட்டது. ஒரு முழு திரைப்படத்தை 10 வினாடிகளில் டவுன்லோடு செய்துவிடும் அளவுக்கு வேகமுள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் விருப்பத்தோடு மாறி வருகின்றனர்.
 
சீனாவின் சீனா மொபைல், சீனா யூனிகாம், சீனா டெலிகாம் உள்பட ஐந்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கிவிட்டதாகவும், இதற்கான கட்டணமாக இந்திய மதிப்பில் மாதம் ரூ.1,289 முதல் ரூ.6,030 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த 5ஜி சேவைக்கான கட்டணம் அதிகம் என்றாலும் சீனாவில் பெரும்பாலானோர் இந்த சேவையை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
5ஜி சேவை அறிவிக்கப்பட்டவுடன் சீனாவில் இந்த சேவையை பெற 10 மில்லியன் பேர் பதிவு செய்திருப்பதாகவும் அடுத்த மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 150 முதல் 170 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ மற்றும் ஏர்டெல் ஆர்வம் காட்டி வந்தாலும், அதற்கான டவர் அமைக்கும் பணி அதிகம் என்பதால் குறைந்தது இன்னும் ஒரு வருடம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி தொழில்நுட்ப சேவையை தொடங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அரை கிலோ மிட்டருக்கு ஒரு சிறிய வகை டவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் இந்த சேவைக்கான ஆரம்பகட்ட பணிகள் முடிய ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments