Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை

Webdunia
புதன், 18 நவம்பர் 2015 (19:24 IST)
சீனாவின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சீன பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


 
 
சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பொதுமக்களை சீன பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
 
சீனாவில் கடந்த 3 வருடங்களாக நிலக்கரி சுரங்கத்தில் தீவிரவாதிகளுடன் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சீனா சந்தேகப்படுகிறது
 
இந்நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியாக  சீன பாதுகாப்பு படை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் தெரிவிக்க சீனா அரசு மறுத்து வருகிறது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments