Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் Deepseek AI நிறுவனத்தின் அபார வளர்ச்சி.. அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி..!

Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (12:42 IST)
சீனாவின்  Deepseek என்ற ஏஐ நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதை அடுத்து அமெரிக்காவை மையமாக கொண்ட ஏஐ நிறுவனங்கள் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளன. இதன் தாக்கம் அமெரிக்க பங்குச்சந்தையில் எதிரொலித்து உள்ளதாகவும் அமெரிக்கா பங்குச்சந்தை படு மோசமாக சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சீனாவின் முன்னணி ஏஐ   நிறுவனமான  Deepseek அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் சாட் ஜிபிடி, ஜெமினி ஆகியவற்றின் செயல்திறனை விட இது மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் மேலும் மலிவு விலையில் இந்த சேவை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி நஷ்டம் அடைந்திருப்பதாகவும் குறிப்பாக ஏஐ நிறுவனங்களின் பங்குகள் 15 முதல் 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு ட்ரில்லியன் டாலர்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட், அல்பாபெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் மோசமாக சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments