Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய பெண்களை தேடும் சீன ஆண்கள்: காரணம் என்ன??

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (11:35 IST)
சீன நாட்டில் மணப்பெண்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், ரஷ்ய மணப் பெண்களை சீன ஆண்கள் தேடிச் செல்கிறார்கள்.

 
இதற்காக சைபீரியாவில் ‘மணப்பெண் சுற்றுலா’ ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பெறும்பாலும், இளம் தொழிலதிபர்கள் சைபீரியாவில் நடைபெறும் ‘மணப்பெண் சுற்றுலா’வில் கலந்துகொண்டு, அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தங்களுக்குப் பிடித்த மணமகளைத் தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்கிறார்கள். 
 
இந்த ஆண்டு பெய்ஜிங், ஹாங்காங், ஷாங்காய், ஷென்ஜென் பகுதிகளைச் சேர்ந்த 5 தொழிலதிபர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த 25 பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 25-45 வயது ஆண்களும் 25-35 வயது பெண்களும் கலந்துகொண்டனர். 
 
முதலில் சம்பிரதாயச் சந்திப்பு, மணமகன், மணமகள் குறித்த விவரங்கள் பரிமாற்றம், குடும்பம், தொழில், பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள், திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை எல்லாம் ஆண்களும் பெண்களும் பரிமாறிக்கொள்கிறார்கள். இறுதியில் தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 
 
சீன ஆண்கள், பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்று ரஷ்யப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். மிதமான அழகுடன் அமைதியாகப் புன்னகையுடன், ஆண்களுடன் போட்டிப் போடாமல் ரஷ்ய பெண்கள் இருப்பதாக சீன ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.  
 
சீனாவில் 120 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கிறார்கள். சீனாவின் ஒரு குழந்தைத் திட்டமும் ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்று நினைப்பதும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான முக்கியக் காரணங்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments