Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிரம்ப் சர்ச்சை பிரச்சாரத்தை, கடுமையாக எச்சரித்த சீனா!!

டிரம்ப் சர்ச்சை பிரச்சாரத்தை, கடுமையாக எச்சரித்த சீனா!!
, வெள்ளி, 11 நவம்பர் 2016 (10:13 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 


 
 
ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், வெற்றி வாகை சூடியுள்ள டிரம்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. 
 
பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சீனாவுடன் ஆரோக்கியமாக பணி செய்வதை தவிர்த்து தனிமைப்படுத்தல், அடுத்த நாடுகளின் விவகாரங்களில் தலையிடல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, அமெரிக்கா தான் முதலில் முக்கியம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஒருதலைப்பட்ச வெளியுறவுக் கொள்கையில் டிரம்ப் தனது பிரச்சாரத்தில் வலியுறுத்தி வந்தார்.
 
மேலும், தனது பிரச்சாரத்தின் போது சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறி வந்தார். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு சீனா தான் காரணம் என்றும் கூறினார்.
 
இதை எல்லாம் தவிர்த்துக் கொண்டு, சீனாவுடன் நல்ல உறவு முறையை மேற்கொள்ளுமாறு சீனா எச்சரித்து உள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

500,1000 நோட்டுகளுக்கு சரக்கு கொடுக்க வேண்டும் - கோரிக்கை வைப்பது யார் தெரியுமா?