Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்: சீனா திட்டம்

சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்: சீனா திட்டம்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (11:55 IST)
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில், உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்க சீனா அரசு திட்டமிட்டுள்ளது.


 
 
இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே 30,000 மக்கள் வந்து செல்கின்றன. இதானால், ரயில் நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது. 
 
இந்த புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட உள்ளது.
 
இந்த ரயில் நிலையம் பற்றி சீன ரயில்வே துறை கூறியதாவது, புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே உருவாக்கப்படவுள்ளது. இதன் நிலப்பரப்பு, ஐந்து கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சமம். இந்த புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளன. மேலும் இந்த ரயில் நிலையத்தால் சீனாவின் தொன்மையான அடையாளமான சீன பெருஞ் சுவருக்கு பாதிப்பு ஏற்படதாது எனக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா உடல்நிலை: பதில் சொல்ல மறுத்த டிஜிபி ராஜேந்திரன்!