Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை சீனா ரகசியமாக உருவாக்கி வருகிறது: தைவான் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (16:14 IST)
2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை சீனா ரகசியமாக  உருவாக்கி வருவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தைவானின் பாதுகாப்பு  உளவுப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 60 ஆயிரம் டன் எடையை சுமக்க வல்ல இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் ஒன்று ஷாங்காயிலும், மற்றொன்று டலியானிலும் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தைவான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தைவான் வெளியிட்டுள்ள தகவல் குறித்து சீன பாதுகாப்பு துறை இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வீழ்த்தியதை கொண்டாடும்விதமாக அந்நாட்டில் மூன்று நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாக சீனா ரகசியமாக விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரித்து வருவதாக அமெரிக்க ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments