Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை மீட்பு

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:32 IST)
சீனாவில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. குழந்தைகள் விளையாட்டு என்ற பெயரில் அடிக்கும் லூட்டி சில சமயம் பெற்றோர்களை தர்ம சங்கட சூழ்நிலையிக்கு ஆளாக்கிவிடுகிறது.
 
சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில் கலந்து கொண்ட இரண்டு வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து கொண்டது. 
 
சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை உணர்ந்த பெற்றோர், குழந்தையை வீடு முழுவதும் தேடினர். அப்போது வாசிங் மெஷினில் இருந்து அழுகுரல் கேட்டது. பதற்றமடைந்து வாஷிங் மெஷினுள் பார்த்த போது குழந்தை வாஷிங் மெஷினுள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து குழந்தையை வாஷிங் மெஷினில் இருந்து எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
 
இதனையடுத்து போலீஸாரின் உதவியோடு பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments