Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சென்னை மெட்ரோ ரயில்கள்

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (22:41 IST)
சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள், ஆஸ்திரேலியா நாட்டில்  பயணிகள் சேவையை தொடங்கியுள்ளது என்ற பெருமைக்குரிய செய்தி அனைத்து ஆஸ்திரேலியா முன்னணி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது சென்னைக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது
 
சென்னையில் உள்ள ரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையான, ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 22 மெட்ரோ ரயில்கள் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் கப்பல்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.  இரண்டு அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்களில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளதாகவும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் முதல்முறையாக வெளிநாடுகளில் தனது சேவையைத் தொடங்கியுள்ள நிலையில் ரயிலின் அமைப்பு, வசதிகள் குறித்து அந்நாட்டு பயணிகள் திருப்தி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமின்றி இன்னும் பல்வேறு நாட்களில் இருந்து சென்னை ஐ.சி.எஃப்-க்கு மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் ஆர்டர்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments