Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடுகாடுகளில் இடமில்லை... ரஷ்யாவில் பரிதாபம்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (09:02 IST)
ரஷ்யாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பல்வேறு நகரங்களில் இடுகாடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பரவி வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும் கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது சீனாவிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ரஷ்யாவில் இதுவரை நடந்திராத வகையில் கடந்த ஒருநாளில் மட்டும் 1,159 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 சடங்களை ஏற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 
அதோடு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பல்வேறு நகரங்களில் இடுகாடி பிரச்சனை ஏற்பட்டு புதிய இடுகாடுகள் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments