இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி: கனடா பிரதமர் அறிவிப்பு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (21:43 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா சீனா நியூசிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு மருந்துப் பொருட்களையும் நிதி உதவியும் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதி உதவி செய்ததாகவும் மேலும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இந்திய அரசு கனடா பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

கோவில் விழாவில் கூட்ட நெரிசல்.. பரிதாபமாக பலியான 9 பேர்.. நிவாரண பணிகளுக்கு உத்தரவு..!

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் மக்களாட்சியை அமைப்போம்! விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments